ADDED : அக் 02, 2025 01:03 AM
* ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று முன்தினம். நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் ஏலம் நடந்தது. 1,240 மூட்டைகளில் வரத்தான நாட்டுசர்க்கரை, 36.07 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் உருண்டை வெல்லம், 30 கிலோ எடையில், 30 மூட்டை வரத்தாகி, 48,000 ரூபாய்க்கு விற்பனையானது. நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லத்தை, பழனி கோவில் தேவஸ்தான நிர்வாகம், 36.55 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்தது.
* வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த தேங்காய் பருப்பு ஏலத்திற்கு, 7,000 கிலோ தேங்காய் பருப்பை வரத்தானது. முதல் தரம் அதிகபட்சம், ஒரு கிலோ, 223.28 ரூபாய், இரண்டாம் தரம், ஒரு கிலோ, 144.68 ரூபாய் என, மொத்தம், 14.61 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமானது.
* ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு, 13,684 தேங்காய்கள் வரத்தாகின. மொத்தம், 5,038 கிலோ எடை கொண்ட தேங்காய், 3 லட்சத்து, 34,390 ரூபாய்க்கு விற்பனையாகின. மேலும், 6,880 கிலோ எடை கொண்ட கொப்பரை தேங்காய், 14 லட்சத்து, 53,467 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய், 17 லட்சத்து, 87,857 ரூபாய்க்கு விற்பனையாகின.
* ஆயுதபூஜையையொட்டி, பவானியில் பூக்கள் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இதில், செவ்வந்தி கிலோ, 300 ரூபாய், சம்பங்கி, 200 ரூபாய், பன்னீர் ரோஸ், 250 ரூபாய், அரளி, 400 ரூபாய், மல்லி, 1,500 ரூபாய், முல்லை, 1,000 ரூபாய்க்கு விற்றது. விலை ஏற்றம் காரணமாக, மக்கள் குறைந்தளவே வாங்கி சென்றனர்.