ADDED : அக் 17, 2025 01:56 AM
* ஈரோடு மாவட்டம் கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி கிலோ, 34 ரூபாய், நேந்திரன் 22 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழை தார், 620 ரூபாய், தேன்வாழை, 410, பூவன், 330, ரஸ்த்தாளி, 590, மொந்தன், 270, ரொபஸ்டா, 160, பச்சைநாடான், 430 ரூபாய்க்கு விற்பனையானது. விற்பனைக்கு வரத்தான, 6,970 வாழைத்தார்களும், 7.50 லட்சம் ரூபாய்க்கு விற்றன.
* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ கிலோ, 740 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை-440, காக்கடா-500, செண்டுமல்லி-40, கோழி கொண்டை-40, ஜாதிமுல்லை- 600, கனகாம்பரம்-400, சம்பங்கி-20, அரளி-120, துளசி-50, செவ்வந்தி-120 ரூபாய்க்கும் ஏலம் போனது.
* புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தை நேற்று நடந்தது. சந்தைக்கு, 30 எருமை, 200 கலப்பின மாடுகள், 100 கன்றுகள், 220 ஜெர்சி ரக மாடுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். கடந்த வாரங்களில், 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற ஜெர்சி மாடுகள், 25 ஆயிரம் ரூபாய் வரை, 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற சிந்து மாடுகள், 34 ஆயிரம் ரூபாய், நாட்டுமாடு, 72 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது. வளர்ப்பு கன்றுகள், 8,000 ரூபாய் முதல், 15 ஆயிரம் வரை விற்பனையானது. கறவை மாடு, கன்றுகளை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டியதால், 5,000 ரூபாய் வரை விலை உயர்ந்தது. அனைத்து கால்நடைகளும் சந்தை துவங்கிய ஐந்து மணி நேரத்தில், ஒரு கோடி ரூபாய்க்கு விற்று விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.