ADDED : நவ 18, 2025 01:51 AM
* ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1.25 லட்சம் தேங்காய் விற்பனைக்கு வரத்தானது. கருப்பு தேங்காய் கிலோ, 61.40 - 69.69 ரூபாய், பச்சை தேங்காய், 42.65 - 62.45 ரூபாய், தண்ணீர் வற்றிய காய், 9௨ ரூபாய் என, 44,708 கிலோ தேங்காய், 27 லட்சத்து, 63,391 ரூபாய்க்கு விலை போனது.
* அந்தியூரில் நேற்று நடந்த வெற்றிலை சந்தைக்கு, 75 கூடை வெற்றிலை வரத்தானது. ராசி வெற்றிலை சிறிய கட்டு, 15 ரூபாய், பெரிய கட்டு, 35 முதல் 50 ரூபாய்க்கு விற்றது. பீடா வெற்றிலை ஒரு கட்டு, 20-35 ரூபாய், செங்காம்பு வெற்றிலை கட்டு, 5-20 ரூபாய் என, 3.25 லட்சம் ரூபாய்க்கு வெற்றிலை விற்றது.
* புன்செய் புளியம்பட்டி பூ சந்தையில், கடந்த இரண்டு நாட்களாக பூக்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிலோ மல்லிகைப் பூ நேற்று, 1,500 ரூபாய்க்கு விற்பனையானது. முல்லை, 640 ரூபாய், காக்கடா, 600 ரூபாய், சம்பங்கி, 60 ரூபாய், கோழிக்கொண்டை, 50 ரூபாய், ஜாதிமுல்லை, 600 ருபாய்க்கு விற்றது.
* கோபி தாலுகா, சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. தென்னங்கருப்பட்டி, 550 கிலோ வரத்தாகி, கிலோ 134 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் கிலோவுக்கு இரண்டு ரூபாய் விலை கூடிது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 4,830 தேங்காய் வரத்தானது. ஒரு காய், 57 முதல் 67 ரூபாய், 47 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி கிலோ, 206 முதல் 232 ரூபாய், ஐந்து மூட்டை எள் வரத்தாகி கிலோ, 102 முதல் 123 ரூபாய், இரண்டு மூட்டை தட்டை பயிறு வரத்தாகி கிலோ, 66 முதல் 67 ரூபாய்க்கு விற்றது.

