ADDED : ஜன 07, 2026 06:25 AM
* ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1,030 மூட்டைகளில் கொப்-பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 180.90 - 200.19 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ, 104.99 - 179.11 ரூபாய் விலையில், 46,845 கிலோ கொப்பரை தேங்காய், 84 லட்-சத்து, 70,071 ரூபாய்க்கு விலை போனது.
* கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 14,055 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 45 - 65.15 ரூபாய் விலையில், 4,072 கிலோ தேங்காய், 2.06 லட்சத்-துக்கு ஏலம் போனது. கொப்பரை தேங்காய், 549 மூட்டை வரத்-தாகி முதல் தரம் கிலோ, 160.99 - 206.99 ரூபாய், இரண்டாம் தரம், 110.99 - 193.49 ரூபாய் விலையில், 26,908 கிலோ கொப்-பரை, 44 லட்சத்து, 36,833 ரூபாய்க்கு விற்பனையானது. எள், 473 மூட்டை வரத்தானது. சிவப்பு எள் கிலோ, 104.99 - 113.09 ரூபாய், மஞ்சள் வெள்ளை எள், 104.99 - 119.72 ரூபாய் விலையில், 35,405 கிலோ எள், 39 லட்சத்து, 93,575 ரூபாய்க்கு விலை போனது.
* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ, 2,480 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை-900, காக்கடா-420, செண்டுமல்லி-30, கோழிக்-கொண்டை- 40, ஜாதிமுல்லை-1,000, கனகாம்பரம்-500, சம்-பங்கி-30, அரளி-70, துளசி-50, செவ்வந்தி 100 ரூபாய்க்கும் விற்பனையானது.
* சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 623 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 46.10 ரூபாய் முதல் 57 ரூபாய் வரை, 284 கிலோ தேங்காய், 12 ஆயிரத்து 766 ரூபாய்க்கு விற்பனையானது.
* கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பாக்கு ஏலம் நேற்று நடந்தது. பாக்கு (உலர்ந்தது) குறைந்தபட்சம் (கிலோ), 175 ரூபாய், அதிகபட்சம், 205 ரூபாய்க்கும் விற்பனையானது. பாக்கு (பழம்), 70 முதல், 78 ரூபாய், பாக்கு (பச்சை காய்), 60 முதல், 70 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 3,830 கிலோ பாக்கு, நான்கு லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதி-காரிகள் தெரிவித்தனர்.

