ADDED : மார் 02, 2026 05:50 AM

* ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 2,250 வாழைத்தார் வரத்தானது. செவ்வாழை தார், 160- ரூபாய் முதல் 1,200 ரூபாய், தேன்வாழை, 80-810, பூவன், 120-670, ரஸ்தாளி, 270-720க்கும், மொந்தன், 40-230க்கும், ஜி-9, 190-590க்கும், பச்சை நாடன், 340-540க்கும் ஏலம் போனது. கதளி கிலோ, 28--56 ரூபாய், நேந்திரன் 8-14க்கும் என, 6.05 லட்சத்துக்கு விற்றது.
* அந்தியூர் வாரச்சந்தையில் இரண்டு நாட்கள் கூடிய கால்நடை சந்தையில், 5,000க்கும் மேற்-பட்ட கால்நடைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஜெர்சி இன மாடுகள், 2,000 ரூபாய் முதல் 49 ஆயிரம் ரூபாய்ம், மலை மாடுகள், 3,௦௦௦ ரூபாய் முதல், 52,000 ரூபாய், நாட்டு மாடுகள், 4,000 ரூபாய் முதல் 59 ஆயிரம் ரூபாய், எருமைகள், 3,500 முதல் 57 ஆயிரம் ரூபாய் வரை, 1.20 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி கிலோ, 42, நேந்திரன், 12 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழைத்தார், 700, தேன்வாழை, 610, பூவன் மற்றும் ரஸ்த்தாளி, தலா 510 ரூபாய்க்கும், மொந்தன், 300, ரொபஸ்டா, 410, பச்சைநாடான், 400 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 6,396 வாழைத்தார்கள், 11.75 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில், ஒரு காய் குறைந்தபட்சம், 10 ரூபாய்க்கும், அதிகபட்சம், 35 ரூபாய்க்கும் விற்பனையானது.
* ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டுக்கு நேற்று, ஆறு டன் மீன் வரத்தானது. மீன்களின் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): வஞ்-சிரம்-1,000, ராட்-600, கடல் பாறை-600, இறால்-600 முதல் 800, மத்தி-550, ஊளி-550, நண்டு-650 முதல் 800, சுறா-600, சங்கரா-350. அணை மீன்களான ரோகு, கட்லா, பாறை தலா-200 ரூபாய்க்கு விற்-றது. மீன்கள் அனைத்தும் கடந்த வாரத்தை விட கிலோவுக்கு, 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விலை
குறைந்தது.
* திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முருங்-கைக்காய் கொள்முதல் நிலையத்துக்கு, 5 டன் முருங்கை நேற்று வரத்தானது. செடி முருங்கை கிலோ, 30 ரூபாய், மரமுருங்கை கிலோ, 40 ரூபாய், கரும்பு முருங்கை, 50 ரூபாய்க்கும் விற்ப-னையானது.

