தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்


ADDED : ஜூன் 12, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி உப ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 170 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 113.85 - 119.20 ரூபாய், இரண்டாம் தரம், 72.88 - 110.20 ரூபாய் என, 5,356 கிலோ கொப்பரை, 6.04 லட்சம் ரூபாய்க்கு விலை போனது. தேங்காய், 51,000 காய் வரத்தானது. ஒரு கிலோ கருப்பு காய், 33.69 - 36.80 ரூபாய், பச்சை காய், 27.05 - 31.88 ரூபாய்க்கும், தண்ணீர் வற்றிய காய், 43.20 ரூபாய்க்கு விற்றது.

* ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து, விற்பனைக்கு மாடுகள் வரத்தானது. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரி

கள் மாடுகளை வாங்க வந்திருந்தனர். 6,000 முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 50 கன்றுகள், 22,000 முதல், 70,000 ரூபாய் மதிப்பில், 200 எருமை மாடுகள், 22,000 முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 250 பசு மாடுகள், 65,000 ரூபாய்க்கும் கூடுதலாக விலையில் முற்றிலுமான கலப்பின மாடுகள் விற்பனைக்கு அழைத்து வந்திருந்தனர். வரத்தான மாடுகளில், 90 சதவீதம்

விற்பனையானது.

* புளியம்பட்டியில் நேற்று நடந்த வாரச்சந்தைக்கு, 600க்கும் மேற்பட்ட சின்ன வெங்காய மூட்டை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. வரத்து அதிகரித்ததால் விலை சரிந்து கிலோ, 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்றது. இதனால் மக்கள் மூட்டை மூட்டையாக போட்டி போட்டு வாங்கி சென்றனர். 25 கிலோ எடை கொண்ட மூட்டை, 500 ரூபாய்க்கு விற்றது.

* புஞ்சை காளமங்கலம் உப ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1,700 தேங்காய் விற்பனைக்கு வரத்தானது. ஒரு கிலோ கருப்பு தேங்காய், 32.99 - 35.46 ரூபாய் என, 743 கிலோ தேங்காய், 25,525 ரூபாய்க்கு விலை போனது.

* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி கிலோ, 50 ரூபாய், நேந்திரன், 43 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழைத்தார், 1,220 ரூபாய்க்கும், தேன்வாழை, 1,010, பூவன், 760, ரஸ்த்தாளி, 660, மொந்தன், 230, ரொபஸ்டா, 560, பச்சைநாடன், 630 ரூபாய் என வரத்தான, 3,250 வாழைத்தார், 8.23 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 190 மூட்டை காய்ந்த நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ, 88 ரூபாய் முதல் 104 ரூபாய் வரை, 66 குவிண்டால் நிலக்கடலை, 5.67 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

* கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நடந்த தேங்காய் பருப்பு கிலோ, 120 ரூபாய் முதல் 124 ரூபாய் வரை விற்றது. வரத்தான, 6,171 கிலோ தேங்காய் பருப்பு, 7.30 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us