/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உள்ளாட்சி துறை பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் தரணும்
/
உள்ளாட்சி துறை பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் தரணும்
உள்ளாட்சி துறை பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் தரணும்
உள்ளாட்சி துறை பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் தரணும்
ADDED : ஏப் 13, 2025 04:31 AM
பெருந்துறை: ஈரோடு மாவட்ட உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.,) பெருந்துறை நகராட்சி மற்றும் கருமாண்டிசெல்லி-பாளையம் டவுன் பஞ்., கிளை சங்க நிர்வாகிகள் மற்றும் பணி-யாளர் கூட்டம், பெருந்துறையில் நேற்று நடந்தது. கிளை தலைவர் முனுசாமி தலைமை வகித்தார். பெருந்துறை கிளை செயலாளர் பிரகாஷ்,
கருமாண்டிசெல்லிபாளையம் கிளை செய-லாளர் ராமன் முன்னிலை வகித்தனர். சங்க தலைவரும், ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளருமான சின்னசாமி, நகராட்சி மற்றும் டவுன் பஞ்., துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட சட்டப்பூர்வ நலன்கள் பற்றி விளக்கி பேசினார். பெருந்துறை நகராட்சியில் நிரந்தரமற்ற துாய்மை பணியா-ளர்களுக்கு தினமும், 646 ரூபாய், நகராட்சியாக தரம் உயர்த்தப்-பட்ட தேதி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும். இதேபோல் ஓட்டுனர், குடிநீர் வினியோக பணியாளர் உள்ளிட்டோருக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். கருமாண்டி செல்-லிபாளையம் டவுன் பஞ்., துாய்மை தொழிலாளர்களுக்கு அரசா-ணைப்படி தினமும், 569- ரூபாய் ஊதியமாக வழங்கப்பட வேண்டும். பெருந்துறை நகராட்சி துாய்மை பணிகளை எக்கா-ரணம் கொண்டும், ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் விடக் கூடாது என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்-டது.

