/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிருஷ்ணகிரியில் லோக் அதாலத்: ரூ.12.87 கோடிக்கு தீர்வு
/
கிருஷ்ணகிரியில் லோக் அதாலத்: ரூ.12.87 கோடிக்கு தீர்வு
கிருஷ்ணகிரியில் லோக் அதாலத்: ரூ.12.87 கோடிக்கு தீர்வு
கிருஷ்ணகிரியில் லோக் அதாலத்: ரூ.12.87 கோடிக்கு தீர்வு
ADDED : மார் 10, 2024 03:34 AM
கிருஷ்ணகிரி: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி, கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி சாய் பிரியா முன்னிலையில், நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் என்பன உள்ளிட்டவைகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, 1,432 வழக்குகளில், 12 கோடியே, 87 லட்சத்து, 6,223 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதரன், மாவட்ட குடும்ப நல நீதிபதி நாகராஜன், சிறப்பு மாவட்ட நீதிபதி அமுதா, மாவட்ட அமர்வு நீதிபதி சுதா, வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

