ADDED : ஜூலை 16, 2026 04:08 AM
ஈரோடு:ஈரோட்டில்,
சிறுமியின் ஆபாச வீடியோவை காண்பித்து பாலியல் தொந்தரவு செய்து கைதான
தொழிலாளி, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு
மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 49, லாரி கிளீனர். ஈரோடு
பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்து காண்பித்து
பாலியல் தொந்தரவு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி, தன் பெற்றோர்
மூலம் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார்
விசாரணை நடத்தி மாதேஸ்வரனை போக்சோ வழக்கில் கைது செய்து, கோபி மாவட்ட
சிறையில் அடைத்தனர்.
இவுரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க,
ஈரோடு எஸ்.பி.,கிரண் ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரைத்தார்.
பரிந்துரையை ஏற்ற கலெக்டர் கந்தசாமி, மாதேஸ்வரனை குண்டர் சட்டத்தில்
அடைக்க நேற்று உத்தரவிட்டார்.
ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் மாதேஸ்வரனை, கோபி மாவட்ட சிறையில் இருந்து அழைத்து சென்று, கோவை
மத்திய சிறையில் அடைத்தனர்.
