ADDED : ஆக 06, 2026 06:27 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:பு.புளியம்பட்டி
டாணாபுதுாரை சேர்ந்தவர் கமல் குமார், 40. இவர் நேற்று காலை டேங்கர்
லாரியில், பால் ஏற்றுவதற்காக கர்நாடக மாநிலம் ஹனுார் சென்று
கொண்டிருந்தார்.
அப்போது கேர்மாளம்-அரே பாளையம் ரோடு கானகரை ஊருக்கு
அருகே வரும் போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில்
பாய்ந்தது. இந்த விபத்தில் கமல் குமார் படுகாயமடைந்தார். இவர்
மீட்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டுள்ளார். ஆசனுார் போலீசார்விசாரிக்கின்றனர்.
