/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லாட்டரி வியாபாரிகள் ஈரோட்டில் கைது
/
லாட்டரி வியாபாரிகள் ஈரோட்டில் கைது
ADDED : டிச 26, 2024 11:42 PM
ஈரோடு:ஈரோடு, கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ். நகரில் சில மாதங்களாக வசிப்பவர் கோச்சடையான், 55, ஸ்ரீதர், 37. மதுரை பி.கல்லுப்பட்டி பகுதியில், கோச்சடையான் லாட்டரி வியாபாரம் செய்து வந்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது, போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக, அவரை மதுரை போலீசார் தேடி வந்தனர். ஆனால், மொபைல் போன் வாயிலாக ஈரோட்டில் இருந்தபடியே லாட்டரி சீட்டு விற்பனையை கோச்சடையானும், ஸ்ரீதரும் இருந்து தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், சைபர் க்ரைம் போலீசார் மொபைல் போன் டவரை அடிப்படையாக வைத்து, கோச்சடையானின் இருப்பிடம் அறிந்து, மதுரை சிறப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் ஈரோடு வந்தனர். இருவரையும் கைது செய்து விசாரணைக்காக மதுரைக்கு அழைத்து சென்றனர்.