/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'தாழ்வாக பறக்கும் ஹெலிகாப்டர்' முதலில் அச்சம்; தற்போது ஆர்வம்
/
'தாழ்வாக பறக்கும் ஹெலிகாப்டர்' முதலில் அச்சம்; தற்போது ஆர்வம்
'தாழ்வாக பறக்கும் ஹெலிகாப்டர்' முதலில் அச்சம்; தற்போது ஆர்வம்
'தாழ்வாக பறக்கும் ஹெலிகாப்டர்' முதலில் அச்சம்; தற்போது ஆர்வம்
ADDED : பிப் 07, 2026 04:43 AM
சென்னிமலை: சென்னிமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக, ஒரு ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வருவது, மக்க-ளிடையே வியப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக காலை, 11:௦௦ மணி மற்றும் மாலை, 5:௦௦ மணி அளவில், சென்னிமலை மலைக்கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தென்படுகிறது. வழக்கத்-துக்கு மிக தாழ்வாக பறந்து செல்வதால், வீடுகளில் இருப்ப-வர்கள் வேடிக்கை பார்ப்பது வழக்கமாகி விட்டது. இப்பகுதியில் உள்ள கனிம வளங்கள் குறித்து புவியியல் ஆய்வு துறையினர் நவீன கருவிகள் மூலம் வான்வழி ஆய்வு நடத்துகிறார்கள். உயர-ழுத்த மின் கோபுரங்கள் மற்றும் மின் கம்பிகளின் உறுதித்தன்-மையை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்கின்றனர். ராணுவ பயிற்சி அல்லது பாதுகாப்பு ஒத்திகை நடக்கிறது என, பல்வேறு யூக தகவல்கள் உலா வருகின்றன. முதல் நாளில் திடீரென பலத்த சத்தத்துடன் ஹெலிகாப்டர் தாழ்-வாக பறந்ததால், மக்கள் தரப்பில் ஒருவித அச்சம் இருந்தது. ஆனால் மூன்று நாளாக தினமும் அதே நேரத்தில் வருவதால் மக்கள் ஆர்வத்துடன் பார்க்க தொடங்கி விட்டனர்.

