/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டி.என்.பாளையத்தில் மின்சாரம் தாக்கி மக்னா யானை சாவு
/
டி.என்.பாளையத்தில் மின்சாரம் தாக்கி மக்னா யானை சாவு
டி.என்.பாளையத்தில் மின்சாரம் தாக்கி மக்னா யானை சாவு
டி.என்.பாளையத்தில் மின்சாரம் தாக்கி மக்னா யானை சாவு
ADDED : அக் 17, 2024 03:10 AM
டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே மின்சாரம் தாக்கி மக்னா யானை உயிரி-ழந்தது. டி.என்.பாளையம் வன பகுதியில் அடுத்தடுத்து யானைகள் மின் வேலியில் சிக்கி உயிரிழந்து வருவது அதிர்ச்-சியை ஏற்படுத்தி வருகிறது.
ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் வன பகுதியானது புலிகள் காப்பக பகுதி என்பதால் ஏராளமான யானை, சிறுத்தை உள்-ளிட்ட வன விலங்குகள் உள்ளன. வன பகுதியில் உள்ள யானைகள் அவ்வப்போது உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பங்களாபுதூர் வனப்பகுதி அருகே தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. கல்லூரிக்கு சொந்தமான கல்கு-வாரி உள்ளது. இந்த கல்குவாரி அருகிலேயே விவசாய நிலமும் உள்ளது. விவசாய நிலம் மற்றும் கல்குவாரிக்குள் யானை உள்-ளிட்ட வன விலங்குகள் புகுவதை தடுக்க மின்வேலி அமைத்துள்-ளனர். இந்த மின்வேலி அருகிலேயே உயர் அழுத்த மின் கம்-பமும் உள்ளது. நேற்று இரவு அங்கு வந்த மக்னா யானை ஒன்று மின்வேலியை உடைத்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. டி.என்.பாளையம் வனத்துறைநினர் சம்பவ இடத்திற்கு சென்று யானை உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்-தினர். பின்னர் உயிரிழந்த யானையை சத்தியமங்கலம் புலிகள் காப்பக வன கால்நடை உதவி மருத்துவர் சதாசிவம் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு செய்து அதே வன பகு-தியில் அடக்கம் செய்தனர். மின் வேலியில் சிக்கி யானை உயிரி-ழந்ததா அல்லது மரக்கிளையை உடைத்த போது உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கி உயிரிழந்ததா என்பது குறித்து ஆய்வின் முடிவில் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.கடந்த சில மாதலங்களுக்கு முன் இதே போன்று டி.என்.பாளையம் அருகே கரும்பாறை பகுதியில் மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்து இருப்பது சமூக ஆர்வலர்க-ளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யானைகள் உயிர-ழப்பை தடுக்க வன பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் வேலி-களை வனத்துறையினர் மற்றும் மின்வாரியத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.