/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு, சென்னிமலையில் மஹா சண்டி யாகம்
/
ஈரோடு, சென்னிமலையில் மஹா சண்டி யாகம்
ADDED : ஆக 02, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவிலில் மஹா சண்டி யாக விழா கடந்த, 30ம் தேதி துவங்கியது. நிறைவு நாளான நேற்று காலை, சண்டி அத்யாய ஹோமம், கன்யகா தம்பதி பூஜை, கோ பூஜை, கசல புறப்பாடு நடந்தது. பின் சின்னமாரியம்பிகைக்கு சண்டி கலசாபிஷேகம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
அதை தொடர்ந்து மீனாட்சி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். * சென்னிமலை மாரியம்மன் கோவிலில், உலக மக்கள் நன்மைக்காக, ஐந்தாவது ஆண்டாக மங்கள மஹா நவ சண்டியாக யாகம் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, தேவி கலசத்துக்கு நவாவரண பூஜை, நவசண்டி யாகம் நடந்தது.