தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிவன்மலை கோவிலில் ஏற்றப்பட்ட மகா தீபம்

சிவன்மலை கோவிலில் ஏற்றப்பட்ட மகா தீபம்

சிவன்மலை கோவிலில் ஏற்றப்பட்ட மகா தீபம்


ADDED : நவ 25, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2026 05:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்; காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், கார்த்திகை தீப திருநாளையொட்டி நேற்று மகா தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும், கோவில்களிலும் தீபங்களை ஏற்றி கொண்டாடுவர்.

இந்த விழாவையொட்டி சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு பூஜை நடந்தது. காலசாந்தி பூஜையை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படட்டது. மாலையில் மூலவருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு சுவாமி புறப்பாடு, சிறப்பு பூஜையை தொடர்ந்து, 6:30 மணிக்கு கம்பத்தில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது திரண்டிருந்த பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.இதேபோல் மடவிளாகம் ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில், திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. மக்களும் வீடுகள் முன் கோலமிட்டு, தீபம் ஏற்றி வழிபட்டனர். சிறுவர்-சிறுமிகள், கம்பி மத்தாப்பு, புஸ்வாணம் கொழுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ந்தனர்.

* தாராபுரம் புதுக்காவல் நிலைய வீதி சுப்ரமணியசுவாமி கோவில் வளாகத்தில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து கோவில் முன் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us