/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் இன்று காலை மஹா கும்பாபிஷேகம்
/
ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் இன்று காலை மஹா கும்பாபிஷேகம்
ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் இன்று காலை மஹா கும்பாபிஷேகம்
ஈங்கூர் தம்பிராட்டி அம்மன் கோவிலில் இன்று காலை மஹா கும்பாபிஷேகம்
ADDED : மே 19, 2024 02:46 AM
ஈங்கூர்: சென்னிமலை-பெருந்துறை பிரதான சாலையில் உள்ளது ஈங்கூர். இங்கு கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தின் ஈஞ்சன் குல மக்களின் குல தெய்வம் தம்பிராட்டி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சேர்ந்த மூவாயிரம் குடும்பத்தினர், கொங்கு மண்டலம் முழுவதும் பரவி வசித்து வருகின்றனர். கோவிலில் இன்று காலை மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா நடக்கிறது. இதையொட்டி அதிகாலையில் ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, நாடி சந்தானம், ஆறாம்கால யாக பூஜை, மஹாபூர்ணாகுதி நடந்தது. காலை, 5:௦௦ மணிக்கு யாத்ராதான சங்கல்பம், 5:30 மணிக்கு கடம் புறப்பாட்டை தொடர்ந்து, 6:௦௦ மணிக்கு மேல், 7:30 மணிக்குள் நுாதன ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடக்கிறது.
அதை தொடர்ந்து காலை 8:30 மணிக்கு மேல் அனைத்து கோபுரங்கள், விநாயகர், பரிவார தெய்வங்கள் மற்றும் தம்பிராட்டி அம்பிகைக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. குலகுரு கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீன ஸ்ரீமாணிக்கவாசக மூலாம்லாய குருபீடம், 57வது ஜெகத்குரு ஸ்ரீமத் ராஜசரவண மாணிக்கவாசக குரு சுவாமிகள் தலைமையேற்று நடத்துகிறார்.
விழாவில் பாசூர் பெரிய மடம் ஈஞ்சன்குல குரு தீஷீதர்கள் கௌமார மரபு தண்டபாணி சுவாமிகள், சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், இந்து சமய அறநிலைய துறை உயர் நிலைக்குழு உறுப்பினர், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிவகிரி ஆதீன குரு பீடாதிபதி பண்டித குரு சுவாமிகள், சென்னிமலை முருகன் அடிமை சுப்புசாமி, அவிநாசி வாகீசர் மடாலயம் ஸ்ரீ காமாட்சிதாச சுவாமிகள் விழாவில் ஆன்மிக உரையாற்றுகின்றனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீதம்பிராட்டி அம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஈஞ்சன்குல பெருமக்கள் செய்துள்ளனர்.

