/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
யார்டில் பராமரிப்பு பணி: ரயில் இயக்கம் மாற்றம்
/
யார்டில் பராமரிப்பு பணி: ரயில் இயக்கம் மாற்றம்
ADDED : செப் 15, 2024 02:28 AM
திருப்பூர்: கோவை ஜங்ஷன், யார்டில் பராமரிப்பு பணி நடப்பதால், திருப்பூரை கடந்து, கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்கள் இயக்கம் மூன்று நாட்களுக்கு மாற்றப்படுகிறது.
தெற்கு ரயில்வே, சேலம் கோட்டம் அறிக்கை:
இன்று, நாளை மற்றும், 18ம் தேதி, ஈரோடு - கோவை பாசஞ்சர் (எண்:06801) இருகூர் வரை மட்டும் இயங்கும்; மேற்கண்ட நாட்களில் சென்னை எழும்பூர் - மங்களூரு எக்ஸ்பிரஸ் (எண்:16159), ஈரோடு - பாலக்காடு டவுன் பாசஞ்சர் (எண்:06819) இருகூர் - போத்தனுார் வழியில் இயங்கும்; பீளமேடு, கோவை வடக்கு, கோவை ஜங்ஷன் செல்லாது. இன்று, நாளை மற்றும் 18 ம் தேதி, ஆலப்புழா - தன்பாத் (எண்:13352), புதுடில்லி - திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் (எண்:12626), எர்ணாகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12678), திப்ரூகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (எண்:22504) கோவை
ஜங்ஷனுக்கு பதிலாக போத்தனுாரில் நிற்கும்.
இன்றும், வரும், 15 ம் தேதியும், பாட்னா - எர்ணாகுளம் (எண்:22644), வரும், 15 ம் தேதி சில்சார் - திருவனந்தபுரம் (எண்: 22644) ரயில் கோவை ஜங்ஷனுக்கு பதிலாக போத்தனுாரில் நிற்கும்.