/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிரதான கட்சிகள் 'ஜகா'வால் பிரசாரம் மந்தம் இடைத்தேர்தல் உற்சாகத்தை இழப்பதாக வருத்தம்
/
பிரதான கட்சிகள் 'ஜகா'வால் பிரசாரம் மந்தம் இடைத்தேர்தல் உற்சாகத்தை இழப்பதாக வருத்தம்
பிரதான கட்சிகள் 'ஜகா'வால் பிரசாரம் மந்தம் இடைத்தேர்தல் உற்சாகத்தை இழப்பதாக வருத்தம்
பிரதான கட்சிகள் 'ஜகா'வால் பிரசாரம் மந்தம் இடைத்தேர்தல் உற்சாகத்தை இழப்பதாக வருத்தம்
ADDED : ஜன 15, 2025 12:29 AM
பிரதான கட்சிகள் 'ஜகா'வால் பிரசாரம் மந்தம்
இடைத்தேர்தல் உற்சாகத்தை இழப்பதாக வருத்தம்
ஈரோடு:
தி.மு.க., தவிர பிரதான கட்சிகள் போட்டியிடாததாலும், அதிக எண்ணிக்கையில் அமைச்சர்கள் வருகை இருக்க வாய்ப்பில்லாததாலும், இடைத்தேர்தல் பிரசாரத்தில் உற்சாகம் இருக்க வாய்ப்பில்லை என்று அரசியல் கட்சி தொண்டர்கள் கருதுகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ஜ., உட்பட சில கட்சிகள் புறக்கணித்து விட்டன. நாம் தமிழர் கட்சி மற்றும் சில சிறிய கட்சிகள், சுயேட்சைகள் மட்டும் மனுத்தாக்கலுக்கு வாய்ப்புள்ளது. கடந்த, 2023 இடைத்தேர்தலில், தேர்தல் தேதி, வேட்பாளர் அறிவிக்கும் முன்பே, ஈரோடு பெரியார் நகரில் தி.மு.க.,வினர் பிரசாரத்தை துவக்கினர். முதல் நாளே அமைச்சர்கள் முத்துசாமி, நேரு பங்கேற்றனர். அடுத்தடுத்த நாட்களில், 30க்கும் மேற்பட்ட இடங்களில் பணிமனை, சிறிய அலுவலகம், மக்கள் சந்திப்புக்கு பட்டிகள் போன்ற இடம் என அமர்க்களம் செய்தனர். பிரசாரத்தில் ,20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் - எம்.பி.,க்கள், மாவட்ட செயலாளர்கள் ஈடுபட்டனர். முதல்வர் ஸ்டாலின், 2 நாள் பிரசாரமும், துணை முதல்வர் 2 முறை தலா இரு நாள் பிரசாரம் இருந்தது.
ஆனால் இம்முறை தேர்தல் அறிவித்து எட்டு நாட்கள் ஆன நிலையில் நேற்று மாலைதான் தி.மு.க., பிரசாரத்தை துவக்கியது. அடுத்தடுத்த நாள் பிரசார அறிவிப்பிலும், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பிரசாரம் செய்வதாக கூறியது தொய்வை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி தி.மு.க.,வினர் கூறியதாவது:
எதிரியே இல்லாத களத்தில் தி.மு.க., நிற்கிறது. பிரசாரம், பட்டிகளில் அடைப்பு, பல அமைச்சர்கள் பிரசாரம், முதல்வர், துணை முதல்வர்கள் வருகை கூட தேவை அடிப்படையில் நடக்கும்.
குறிப்பிட்ட அமைச்சர்கள், குறிப்பிட்ட நாளில் வந்து பிரசாரம் செய்து விட்டு செல்வார்கள். துணை முதல்வர் உதயநிதி, 2 நாள் பிரசாரத்துக்கு வாய்ப்புள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வரவில்லை. காணொலி மூலமே சில இடங்களில் பிரசாரம் செய்தார்.
அதேபோல ஈரோட்டிலும் காணொலி பிரசாரத்துக்கே வாய்ப்புள்ளது. பிரசாரம் கடுமையானாலும், வேறு கட்சிகள் போட்டியிட்டு பிரசாரம் செய்ய வாய்ப்பில்லை. எனவே வீடுவீடாக செல்லும் பிரசாரமும், கடைசி சில நாள் கவனிப்புக்கும் மட்டுமே வாய்ப்புள்ளது.
நாம் தமிழர் கட்சி தவிர பிற சிறிய கட்சிகள், சுயேட்சைகள் பெயரளவில் தான் பிரசாரத்துக்கு வாய்ப்புள்ளதால், தேர்தல் பரபரப்பு இருக்காது. 20ல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்டால், அடுத்து, 14 நாட்களே பிரசாரம் நடக்கும். அதிலும், 13ம் தேதி மாலையுடன் பிரசாரம் நிறைவு பெறும். எனவே இம்முறை பிரசாரம், எதிர்பார்ப்பை, வாக்காளர்கள் குறைவாகவே எதிர்பார்க்க முடியும். இவ்வாறு கூறினர்.