ADDED : ஜன 15, 2025 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்:
அகிலபாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், தாராபுரத்தில் சோளக்கடைவீதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
தலைவர் சண்முகவேல், பிரசன்ன வித்வான் மஹாதேவ் ஐயர் தலைமை வகித்தனர். சிறப்பு, ஹோமம் மற்றும் பூஜைகளில் திரளானோர் பங்கேற்றனர். தொடர்ந்து சரண கோஷங்கள் முழங்க மகரஜோதி ஏற்றும் நிகழ்வு நடந்தது. நிகழ்ச்சியையொட்டி, பஜனை, அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை ஜெமினி பெருவழி பயணக்குழுவினர் செய்திருந்தனர்.