ADDED : ஏப் 27, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில் : வெள்ளகோவில், உப்பு பாளையத்தில் பொய்யாமொழி விநாயகர் மற்றும் மலையம்மன் கோவிலில் திருப்பணி நடந்தது.
கும்பாபிஷேக நிகழ்வு கடந்த, 25ம் தேதி காலை தொடங்கியது. அதை தொடர்ந்து யாக பூஜை தொடங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜையை தொடர்ந்து, பொய்யாமொழி விநாயகர் கோபுர கும்பாபிஷேகம், பொய்யாமொழி விநாயகர் மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 9:30 மணிக்கு மலையம்மன் கோவில் விமான கோபுர கும்பாபிஷேகம், மூலவர் மகா கும்பாபிஷகமும் நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

