ADDED : மே 18, 2026 01:56 AM
அ நிறம் | அளவு
நம்பியூர்:நம்பியூர் அருகே வரப்பாளையம்
போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட காட்டுப்பகுதியில், அழுகிய நிலையில்
வாலிபர் பிணம் மரத்தில் தொங்கியது. போலீசார் சடலத்தை கைப்பற்றி
விசாரித்தனர்.
மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது
கொலை செய்யப்பட்டு மரத்தில் துாக்கில் தொங்க விடப்பட்டாாரா என்ற
கோணத்தில் விசாரிக்கின்றனர். கருப்பு நிறத்தில் பேண்ட், மரக்கலர் சட்டை
அணிந்திருந்தார். வலது கையில் சில்வர் வளையம் இருந்தது. எம்மாம்பூண்டி வி.ஏ.ஓ., கிருஷ்ணன் புகாரின்படி, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
