/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜொமேட்டோ ஊழியரை தாக்கியதில் ஒருவர் கைது
/
ஜொமேட்டோ ஊழியரை தாக்கியதில் ஒருவர் கைது
ADDED : ஏப் 27, 2025 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரம் அருகே சில தினங்களுக்கு முன், உணவு வினியோகிக்க சென்ற ஜொமேட்டோ ஊழியர் செந்தில்குமாரை, நான்கு பேர் தாக்கினர்.
இதுகுறித்த புகாரின்படி தாராபுரம் போலீசார் விசாரித்தனர். இதில் ஜொமேட்டோ ஊழியர் செந்தில்குமார், குடும்ப தகராறு காரணமாக, அவரது மனைவி குளிக்கும்போது வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டியது  தெரிந்தது. இதனால் ஆத்திரமடைந்த திவ்யாவின் உறவினர் கரூர், பசுபதிபாளையத்தை சேர்ந்த அவினாஷ், ராஜா, வீரக்குமார், கவின் ஆகியோர், உணவு ஆர்டர் செய்வது போல், செந்தில்குமாரை வரவழைத்து தாக்கியதும் தெரிந்தது. இதில் அவினாஷை, தாராபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

