/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கும்பாபிஷேக விழாவில் டூவீலர் திருடியவர் கைது
/
கும்பாபிஷேக விழாவில் டூவீலர் திருடியவர் கைது
ADDED : ஆக 28, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த பாப்பினி கிராமம், பச்சாபாளையத்தில் கடந்த இரண்டு நாட்களாக கோவில் கும்பாபிஷேக விழா நடந்து வருகிறது. விழாவிற்கு வந்த பக்தர்கள், தங்கள் வாகனங்களை வெளியே நிறுத்தி விட்டு, உள்ளே சென்ற நேரத்தில் குமரேசன், 40, என்பவரின் டி.வி.எஸ். எக்ஸ்எல் மொபட்டை ஒருவர் திருடியுள்ளார்.
அங்குள்ளவர்கள் சந்தேகத்தின் பேரில், அவரை பிடித்து காங்கேயம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் வெள்ளகோவில் வள்ளியரச்சல் பகுதியை சேர்ந்த கணேசன், 44, என்பது தெரியவந்தது. காங்கேயம் போலீசார் கணேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

