/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது
/
சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது
ADDED : ஜன 02, 2025 02:58 AM
பவானி:சிறுமி குளிப்பதை, மொபைல் போனில் வீடியோ எடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம், பவானி அருகே ஊராட்சிக்கோட்டையை சேர்ந்தவர் ஸ்ரீதர், 22, டிரைவர். இவர், மேட்டூர் சாலையில் குட்டைமுனியப்பன் கோவில் பகுதியில், வாடகைக்கு ரூம் எடுத்து தங்கியுள்ளார். இரு நாட்களுக்கு முன், ஸ்ரீதர் அதே பகுதியில், 13 வயது சிறுமி குளிப்பதை, மொபைல்போனில் வீடியோ எடுத்தார்.
இதையறிந்த சிறுமியின் பெற்றோர், பவானி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர்.
சிறுமி குளித்ததை வீடியோ எடுத்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், ஸ்ரீதரை கைது செய்த போலீசார், போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபி கிளை சிறையில் அடைத்தனர்.