/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மது குடிக்க பணம் தராததால் டீக்கடையை எரித்த ஆசாமி
/
மது குடிக்க பணம் தராததால் டீக்கடையை எரித்த ஆசாமி
ADDED : ஜூன் 22, 2025 01:06 AM
ஈரோடு, ஈரோடு, வில்லரசம்பட்டி, பெரியசேமூர், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சின்னசாமி, 65; அதே இடத்தில் டீக்கடை மற்றும் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம், 49; குடிபோதையில் டீக்கடையில் அமர்ந்து அனுமதியின்றி மது குடிப்பதுடன், சின்னசாமியிடம் மது குடிக்க பணம் கேட்பார்.
சின்னசாமி பணம் கொடுக்க மறுத்ததால், கடந்த, 19ம் தேதி நள்ளிரவில் ஓலையால் வேயப்பட்ட டீக்கடைக்கு தீ வைத்தார். இதில் பிரிட்ஜ், காஸ் ஸ்டவ், டீ பாய்லர் உள்ளிட்ட, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள் எரிந்து நாசமானது. சின்னசாமி புகாரின்படி தர்மலிங்கத்தை, வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.