ADDED : மே 27, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட அந்தியூர் அருகே முரளி பிரிவு, செல்லம்பாளையம் கிழக்கு பீட் எல்லையில், ரேஞ்சர் முருகேசன் தலைமையில், பாரஸ்டர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் வன ஊழியர்கள் அதிகாலையில் ரோந்து சென்றனர்.
கொள்ளுப்பாலி பகுதியில் சாக்கு மூட்டையுடன் வந்தவரை பிடித்தனர். எண்ணமங்கலத்தை அடுத்த கோவிலுாரை சேர்ந்த அம்மாசை, 35, என்பதும், மான் வேட்டையாட வந்ததும் தெரிந்தது. சாக்கு மூட்டையில் இருந்த, 30 கிலோ மான் கறி, கத்தியை பறிமுதல் செய்தனர். வன உயிரின குற்ற வழக்குப்பதிவு செய்து, பவானி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

