/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போதையில் ஆற்றில் இறங்கியவர் உயிரிழப்பு
/
போதையில் ஆற்றில் இறங்கியவர் உயிரிழப்பு
ADDED : செப் 04, 2025 02:11 AM
பவானி, பவானி அடுத்த அத்தாணி அருகே, கரட்டூர்மேடு பகுதியை சேர்ந்தவர் மகுடேஸ்வரன், 26. இவர், இதே பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி உட்பட ஒரு மகன் உள்ளனர். நேற்று மாலை மது அருந்தி விட்டு, கருல்வாடிப்புதுாரில் உள்ள பவானி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார்.
அங்கே போதையில் குளிக்கும் போது, தண்ணீரில் மூழ்கினார். இது குறித்து அவரது நண்பர்கள், அந்தியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி, மகுடேஸ்வரனை சடலமாக மீட்டனர். பின்னர் அவரது உடல் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு, உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.