ADDED : ஆக 10, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
பவானி:பவானி அருகே பருவாச்சியை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 68; இவரது வீட்டருகே முனியப்பன் கோவில் பின்புறம் கிணறு உள்ளது. அந்த இடத்தில் சுப்பிரணியத்தின் துண்டு, செருப்பு கிடந்தது.
சந்தேகத்தின்படி
பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. தீயணைப்பு நிலைய
வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடியதில் சுப்பிரமணியத்தின் உடல்
கிடைத்தது. தவறி விழுந்து இறந்தாரா அல்லது கிணற்றில் குதித்து தற்கொலை
செய்து கொண்டாரா என்பது குறித்து, பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.
