/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அழுக்கு துணியை எரித்தவர் தீயில் சிக்கி பலி
/
அழுக்கு துணியை எரித்தவர் தீயில் சிக்கி பலி
ADDED : ஜன 04, 2026 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் ஊதியூரை அடுத்த கொடுவாய், என்.காஞ்சிபுரம் பகுதியில் இரண்டாண்டாக மனநலம் பாதிக்கப்பட்ட, 47 வயது ஆண் சுற்றி திரிந்தார்.
நேற்று முன்தினம் மாலை, தான் வைத்திருந்த அழுக்கு துணி மூட்டைகளை சாலையோரம் போட்டு தீ வைத்து எரித்தார். எதிர்பாராதவிதமாக அவர் ஆடையில் தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் உடல் முழுக்க பரவியதில் கருகி பலியானார். ஊதியூர் போலீசார் உடலை மீட்டு திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

