ADDED : ஜன 04, 2026 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த உப்பாறு அனையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, அணையில் இருந்து நேற்று மதியம் தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி திறந்து வைத்தனர். நேற்று முதல் வரும், 23ம் தேதி வரை, உரிய இடைவெளி விட்டு, 173 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப தண்ணீர் திறக்கப்படும்.அணையின் வலது புற கால்வாயில், 72 கன அடி, இடதுபுற கால்வாயில், 15 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராபுரம் தாலுகா பகுதியில், 6,060 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.

