ADDED : நவ 19, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
கோபி:கவுந்தப்பாடி
அருகே பெரியபுலியூரை சேர்ந்தவர் மாரிமுத்து, 74, விவசாயி; இவர்
கடந்த 16ல் மாலை 5:30 மணிக்கு, தங்களது தோட்டத்தில் தண்ணீர்
பாய்ச்சும்போது. எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து
இறந்தார்.
அவரது உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மகன்
ராமசாமி கொடுத்த புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார்
விசாரிக்கின்றனர்.
