ADDED : செப் 09, 2026 07:11 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
ரயில்வே ஸ்டேஷனில் கடந்த, 2019ல் சிறுவன் கடத்தப்பட்டார்.
ஈரோடு ரயில்வே
போலீசார் வழக்குப் பதிந்து சிறுவனை மீட்டனர். சிறுவனை கடத்திய
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அமித் பொட்டாய், 27, தலைமறைவானார்.
ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றம், அமித்தை பிடிக்க பிடியாணை
பிறப்பித்தது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டு,
அமித் பொட்டாயை கைது செய்தனர். ஈரோடு குற்றவியல் நீதிமன்றம் எண்--2ல்
ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
