ADDED : அக் 17, 2026 07:23 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டியை
அடுத்த குரும்பபாளையத்தில் கிரசர் நிறுவனம் செயல்படுகிறது.
நேற்று அதிகாலை, 4:00 மணி அளவில் நிறுவனத்துக்குள் புகுந்த மர்ம ஆசாமி,
இரும்பு பொருட்களை திருடி இருசக்கர வாகனத்தில் வைத்து தப்ப முயன்றார்.
இரவு நேர காவலாளி மற்றும் ஊழியர்கள் சேர்ந்து ஆசாமியை பிடித்து தர்ம
அடி கொடுத்தனர். பலத்த காயமடைந்தவரை புன்செய் புளியம்பட்டி போலீசார்
மீட்டு சத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விசாரணையில்
குரும்பபாளையத்தை சேர்ந்த சாமியப்பன், 30, என்பதும், 20 கிலோ
எடையுள்ள இரும்பு பொருட்களை திருட முயற்சித்தது தெரிந்தது.
சாமியப்பனுடன் இணைந்து பெண் உட்பட மூன்று பேர் திருட்டில்
ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. நிறுவனத்தின் 'சிசிடிவி' கேமரா
பதிவுகளை போலீசார் ஆய்வு செய்கின்றனர்.
