தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பெண் ஹாஸ்டல் வார்டன் மாயம்; கணவர் புகார்

பெண் ஹாஸ்டல் வார்டன் மாயம்; கணவர் புகார்

பெண் ஹாஸ்டல் வார்டன் மாயம்; கணவர் புகார்


ADDED : அக் 17, 2026 07:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2026 07:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி:பவானி ஊராட்சிக்கோட்டை ஜீவா நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 29; நாமக்கல் தனியார் கல்லுாரியில் சமையல் உதவியாளராக வேலை செய்கிறார்.

இவரது மனைவி மீனா, 29; அதே கல்லுாரி ஹாஸ்டலில் வார்டனாக வேலை செய்கிறார். இருவரும் விடுமுறை எடுத்துக்கொண்டு ஊராட்சிக்கோட்டையில் உள்ள வீட்டுக்கு வந்தனர். தம்பதியர் பாண்டிச்சேரி செல்லதிட்டமிட்டிருந்தனர். குழந்தைகளை அழைத்து செல்வது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மீனா வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். பன்னீர் செல்வம் புகாரின்படி பவானி போலீசார் தேடிவருகின்றனர்.

* கவுந்தப்பாடி அருகே பி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பவித்ரா, 20; சித்தோட்டில் ஒரு கல்லுாரியில், பி.காம்., இரண்டாமாண்டு படிக்கிறார். கடந்த, 9ம் தேதி கல்லுாரி சென்ற பவித்ரா, மாலையில் வீடு திரும்பவில்லை. உறவினர், தோழிகள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது

குறித்து அவரின் தாய் கோமதி புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us