தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சிலை வைக்க அனுமதி மறுப்பால் வனத்துறை அலுவலகம் முற்றுகை

சிலை வைக்க அனுமதி மறுப்பால் வனத்துறை அலுவலகம் முற்றுகை

சிலை வைக்க அனுமதி மறுப்பால் வனத்துறை அலுவலகம் முற்றுகை


ADDED : அக் 17, 2026 07:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2026 07:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானிசாகர்:பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் வனப் பகுதியை ஒட்டி ஆனைக்குத்தி முனியப்பன் கோவில் உள்ளது. காராச்சிக்கொரை, சுஜில் குட்டை, புதுப்பீர் கடவு, பட்டரமங்கலம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட வன கிராம மக்கள், இக்கோவிலில் பல தலைமுறைகளாக வழிபாடு நடத்தி

வருகின்றனர்.

கோவிலில் புதியதாக விநாயகர் சிலை வைப்பதற்கான நடவடிக்கைகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர். ஆனால் பவானிசாகர் வனத்துறை அதிகாரிகள் கட்டுமான பணிக்கு தடை விதித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், பவானிசாகர் வனச்சரக அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு, நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பவானிசாகர் ரேஞ்சர் சங்கர், மக்கள் தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மக்கள் கூறுகையில், 'வன உரிமை சட்டப்படி கோவிலில் வழிபாடு நடத்த மக்களுக்கு உரிமை உள்ளது. மேலும் அணை நீர்த்தேக்கப்பகுதியில் கோவில் அமைந்துள்ள பகுதி நீர்வளத் துறைக்கு சொந்தமானது. இதற்கு வனத்துறையினர் கட்டுப்பாடு விதிக்கக்கூடாது' என்றனர்.

'இது தொடர்பாக கோரிக்கை மனு அளிக்குமாறும், உயரதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பி வைத்து முடிவு செய்து கொள்ளலாம்' என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட மக்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us