/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தனக்கு தானே கழுத்தை அறுத்துக்கொண்டவர் பலி
/
தனக்கு தானே கழுத்தை அறுத்துக்கொண்டவர் பலி
ADDED : ஜூலை 12, 2025 01:40 AM
பள்ளிப்பாளையம் :பள்ளிப்பாளையம் அருகே, தனக்கு தானே கழுத்தை அறுத்துக்கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் பலியானார்.நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் மாரிசெட்டி, 70; இவர், சில ஆண்டாக உடல்நலமின்றி அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மிகவும் மனமுடைந்து காணப்பட்ட மாரிசெட்டி, கடந்த, 6ல் கத்தியை எடுத்து தனக்கு தானே கழுத்தை அறுத்துக்கொண்டார்.
இதில் ரத்தம் பீறிட்டு வெளியேறிய நிலையில், அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மாரிசெட்டி, நேற்று காலை உயிரிழந்தார். இவரது மகன் குமார் கொடுத்த புகார்படி, பள்ளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.