ADDED : அக் 22, 2026 06:50 AM
அ நிறம் | அளவு
ஈரோடு;பெருந்துறை,
குன்னத்துார் சாலை மஜித் வீதியை சேர்ந்தவர் நுாருதீன், 51. இவரது
சொந்த ஊர் பெருந்துறை கள்ளியம்புதுார். நேற்று முன்தினம் பழைய
ரயில்வே ஸ்டேஷன் அருகே, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில்
நின்றிருந்தார்.
ஈரோடு மதுவிலக்கு போலீசார் விசாரித்து, அவரிடம்
விற்க வைத்திருந்த, 2.750 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துடன், கைது
செய்தனர்.
