ADDED : ஆக 28, 2026 06:35 AM
அ நிறம் | அளவு
கோபி:பவானி ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த, அடையாளம் தெரியாத ஆண் உடலை, கவுந்தப்பாடி போலீசார் நேற்று மீட்டு விசாரிக்கின்றனர்.
கவுந்தப்பாடி
அருகே பெருந்தலையூர் பகுதி பவானி ஆற்றில், அழுகிய நிலையில், 50 வயது
மதிக்கத்தக்க ஆண் உடல் மிதப்பதாக, கவுந்தப்பாடி போலீசாருக்கு
நேற்று மாலை, 6:00 மணிக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு
சென்று, உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் சுயவிபரம் ஏதும்
தெரியவில்லை. பெருந்தலையூர் கிராமம், வி.ஏ.ஓ., கார்த்தி, 39, கொடுத்த
புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
