தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 100 சதவீத தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்கள் கவுரவிப்பு

100 சதவீத தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்கள் கவுரவிப்பு

100 சதவீத தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்கள் கவுரவிப்பு


ADDED : ஆக 28, 2026 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 06:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோட்டில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 2025-26ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுத்தந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

கடந்த, 2025-26ம் ஆண்டில், 10ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில், 1,571 ஆசிரியர்கள், 100 சதவீத தேர்ச்சியை பெற்று தந்துள்ளனர். அவர்களில், சமூக அறிவியல் பாடத்தில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுத்தந்த, 245 ஆசிரியர்களுக்கு கலெக்டர் கந்தசாமி, பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

கடந்த கல்வி ஆண்டைவிட இந்தாண்டு, 100 சதவீத தேர்ச்சியை அதிகரிக்க வேண்டும். ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதத்தையும் உயர்த்த வேண்டும். மாணவர்களுக்கு பாடம் சார்ந்த கல்வி அறிவை வழங்குவதுடன், சமூக அறிவியல் பாடம், அன்றாட சமூக வாழ்க்கை தொடர்பான பாடங்கள், சிந்தனை, அறிவு திறன் வளர்ப்பவைகளை தெரிவிக்க வேண்டும் என, கலெக்டர் கேட்டு கொண்டார்.

பின், சித்தோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 'கிளாட்' நுழைவு தேர்வுக்கான உண்டு உறைவிட பயிற்சி வகுப்பை கலெக்டர் துவக்கி வைத்தார். இப்பயிற்சி, மூன்று நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

சி.இ.ஓ., மான்விழி, டீ.இ.ஓ., ரவிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us