/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மணமான மகன் தற்கொலை போலீசில் தந்தை புகார்
/
மணமான மகன் தற்கொலை போலீசில் தந்தை புகார்
ADDED : அக் 14, 2024 05:07 AM
சென்னிமலை: சென்னிமலை, முருங்கத்தொழுவு, அம்மன் கோவில் புதுார், வாய்க்கால் மேட்டை சேர்ந்தவர் கோவிந்தன், 54; இவருக்கு இரு மகன்கள். இருவருக்கும் திருமணமாகி விட்டது. மூத்த மகன் மனைவியுடன் ஈரோட்டில்
வசிக்கிறார்.
இளைய மகன் சூர்யா பெற்றோருடன் வசித்தார். இவர் கோவையில் ஹிட்டாச்சி இயந்திர ஆப்பரேட்டராக பணிபுரிந்தார். குழந்தை பிறந்துள்ளதால்
துறையூரில் உள்ள பெற்றோர்
வீட்டில் மனைவி உள்ளார். ஒரு வாரமாக தாய், மனைவியுடன் சூர்யா பேசாமல்
இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் குடும்பத்தினர் அரச்சலுார் அருகே கோவி-லுக்கு சென்று விட்ட நிலையில்,
தனியாக இருந்த சூர்யா, சல்பாஸ் விஷ மாத்திரை தின்று விட்டார். இதுகுறித்து அண்ணி ரம்யாவுக்கு, மொபைல்போனில் தெரிவித்துள்ளார். கோவிலில் இருந்து அனைவரும் உடனடியாக
சென்றனர்.
சூர்யாவை மீட்டு மேல் சிகிச்சைக்காக, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை இறந்து விட்டார். இதுகுறித்து தந்தை கோவிந்தன் புகாரின்படி, சென்னிமலை போலீசார் விசாரிக்கின்-றனர்.