ADDED : மார் 11, 2024 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:மாசி
மாத அமாவாசை தினமான நேற்று, ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர், கஸ்துாரி
அரங்கநாதர், கருங்கல்பாளையம் சோழீசுவரர், திண்டல் வேலாயுதசுவாமி
உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதேபோல் பெரிய
மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன், கோட்டை
பத்ரகாளியம்மன், கள்ளுக்கடை மேடு கொண்டத்து காளியம்மன்,
கொங்கலம்மன் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில், திரளான பக்தர்கள்
பங்கேற்றனர்.
* அந்தியூர் பத்ரகாளியம்மன் மஞ்சள் காப்பு
அலங்காரத்தில் நேற்று அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில்
காத்திருந்து தரிசனம் செய்தனர். இதேபோல் தவிட்டுப்பாளையம் மற்றும்
சுற்றுவட்டார பகுதி கோவில்களில், மாசி மாத அமாவாசை வழிபாடு
நடந்தது.

