/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டைத்தேர்தல் நடக்கும் வார்டில் 'மாஸ் கிளீனிங்'; விதி மீறலில் வராதா என எதிர்க்கட்சிகள் கேள்வி

ADDED : ஜன 28, 2025 06:47 AM
ஈரோடு: இடைத்தேர்தல் நடக்கும் மாநகராட்சி வார்டில், 'மாஸ் கிளீனிங்' நடந்தது. இந்த செயல் தேர்தல் விதிமீறலில் வராதா? என, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, மாநகராட்சி ஏழாவது வார்டு பகுதிகளான பி.பெ.அக்ரஹாரம், அண்ணா நகர், நஞ்சப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில், 'மாஸ் கிளீனிங்' நேற்று நடந்தது. சுகாதார ஆய்வாளர் கண்ணன் மேற்பார்வையில் நடந்த பணியில், துாய்மை பணியாளர், கொசு ஒழிப்பு பணியாளர், பொறியியல் பணியாளர்கள் ஈடுபட்டனர். தெருக்களை கூட்டி சுத்தம் செய்தல், பிரதான சாலைகளில் தேங்கிய மணலை அள்ளுதல், தேவையற்ற குப்பை அகற்றுதல், டெங்கு கொசு புழு உற்பத்தியாகும் இடங்களில் புகை மருந்து அடித்தல், வாய்க்கால் துார்வாருதல் உள்ளிட்ட பணிகள் நடந்தன.
இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் கண்ணன் கூறியதாவது: ஏழாவது வார்டில் சிறு, சிறு சந்துகள் அதிகம் உள்ளன. துாய்மை பணியாளர்கள் இன்று (நேற்று) அதிகம் பேர் இருந்தனர். எனவே இப்பகுதியில் உள்ள சாக்கடைகளை துாய்மை செய்யும் பணியை மேற்கொண்டோம். இது வழக்கமானது தான். இவ்வாறு அவர் கூறினார். அதேசமயம் இதைப்பார்த்த எதிர்க்கட்சியினர், தேர்தல் நடத்தை விதிமீறலில் இது வருமா, வராதா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். தேர்தல் விதிமீறலை கண்காணிக்கும் அதிகாரிகளுக்கே வெளிச்சம்.