/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ் இன்று முதல் கரூரில் நிறுத்தப்படும்
/
மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ் இன்று முதல் கரூரில் நிறுத்தப்படும்
மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ் இன்று முதல் கரூரில் நிறுத்தப்படும்
மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ் இன்று முதல் கரூரில் நிறுத்தப்படும்
ADDED : நவ 03, 2024 01:18 AM
மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ்
இன்று முதல் கரூரில் நிறுத்தப்படும்
கரூர், நவ. 3-
பாரமரிப்பு பணி காரணமாக, மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று முதல் கீழ்வரும் தேதிகளில் மட்டும், கரூரில் நிறுத்தப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர் - மோகனுார் ரயில்வே இருப்பு பாதையில், பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், மயிலாடுதுறை-சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்-16811) நாள்தோறும் காலை, 6:20 மணிக்கு புறப்படும். இந்த ரயில் பராமரிப்பு பணி காரணமாக, இன்று முதல், 3, 9, 10, 16, 17, 23, 24, 30 ஆகிய தேதிகளில், கரூரில் நிறுத்தப்படும். சேலம் வரை செல்லாது.
அதேபோல், சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (எண்-16812) நாள்தோறும் மதியம், 2:05 மணிக்கு புறப்படும். இந்த ரயில் இன்று முதல், 3, 9, 10, 16, 17, 23, 24, 30 ஆகிய தேதிகளில், பராமரிப்பு பணி காரணமாக கரூரில் நிறுத்தப்படும். மயிலாடுதுறை வரை செல்லாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.