ADDED : ஜூலை 05, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்ட போலீஸ் அலுவலகத்தில், நசியனுார் மற்றும் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் காவலர், அமைச்சு பணியாளர்களுக்கான இலவச பொது மருத்துவம், கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. எஸ்.பி., சுஜாதா முகாமை துவக்கி வைத்தார்.
டாக்டர் ராஜன் தலைமையிலான குழுவினர், கண் பரிசோதனை செய்தனர். சிலருக்கு மருத்துவ ஆலோசனை, மருந்து வழங்கப்பட்டது. உயர் சிகிச்சை தேவைப்படுவோருக்கு பரிந்துரை அளிக்கப்பட்டது.