ADDED : நவ 14, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் வட்ட சட்டப் பணிகள் குழு, வழக்கறிஞர் சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் திருப்பூர் மெல்வின் கோன்ஸ் லைன்ஸ் சங்கம் சார்பில், காங்கேயம் நீதிமன்ற ளாகத்தில் மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மாலதி, குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நீதிபதி தரணீசுரன் முன்னிலை வகித்தனர். முகாமில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, பொது மருத்துவம் உள்பட பல்வேறு பரிசோதனை வழங்கப்பட்டது. வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், மக்கள் என, ௧௫௦க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்

