ADDED : செப் 28, 2024 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: வெள்ளககோவில் நகராட்சியில் துாய்மை இந்தியா திட்டத்தில், நகராட்சி மற்றும் ஆர்த்தோலைப் மருத்துவமனையுடன் இணைந்து, துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
நகராட்சி தலைவர் கனியரசி முத்துக்குமார், நக-ராட்சி கமிஷனர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தனர். 110 பேருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா, மற்றும் இதர உடல் உபாதை குறித்து பரிசோதனை செய்து மருந்து வழங்கினர்.