/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கர்ப்பபையில் ஒட்டிய நஞ்சுக்கொடியை ஆப்பரேஷனில் அகற்றிய மருத்துவ குழு
/
கர்ப்பபையில் ஒட்டிய நஞ்சுக்கொடியை ஆப்பரேஷனில் அகற்றிய மருத்துவ குழு
கர்ப்பபையில் ஒட்டிய நஞ்சுக்கொடியை ஆப்பரேஷனில் அகற்றிய மருத்துவ குழு
கர்ப்பபையில் ஒட்டிய நஞ்சுக்கொடியை ஆப்பரேஷனில் அகற்றிய மருத்துவ குழு
ADDED : நவ 10, 2024 03:03 AM
ஈரோடு: ஈரோடு கே.எம்.சி.ஹெச்., ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், அதிக உதிரப்போக்குடன் நஞ்சுக்கொடி கர்ப்பப்பையில் ஒட்டிய நிலையில் வந்த பெண்ணை, சிறப்பு மருத்துவர்கள் உதவியுடன் காப்பாற்றி உள்ளனர்.
நஞ்சுக்கொடி கர்ப்பப்பையுடன் ஒட்டிய நிலையில் இருப்பது, சராசரியாக, 250 தாய்மார்களில் ஒருவருக்கு நிகழக்கூடியது. குழந்தை பிறந்த அரைமணி நேரத்திற்குள் நஞ்சுக்கொடி தானாக வெளியேற வேண்டும். இல்லையேல் அதிக உதிரப்போக்கு ஏற்-பட்டு, தாயின் உயிருக்கே ஆபத்தாக முடியும். இந்நிலையில் கர்ப்பப்பையுடன் நஞ்சுக்கொடி ஒட்டிய நிலையில், மூன்றாவது முறையாக கருத்தரித்த நிலையில் ஒரு பெண், ஈரோடு கே.எம்.சி.ஹெச்., ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மகப்பேறு மருத்துவர் காயத்ரி, அறுவை சிகிச்சை செய்து குழந்-தையை காப்பாற்றிய பின், கர்ப்பப்பையும் அகற்ற உறவினர்க-ளிடம் கூறினார். பின் தலைமை அறுவை சிகிச்சை மருத்துவர் மோகன் தலைமையிலான மருத்துவ குழுவினர், 3 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்-டது.
தற்போது சிக்கல் நிறைந்த கருத்தரிப்பு அதிகரித்து வருகிறது. அதற்கேற்றாற்போல் அனைத்தும் ஒருங்கிணைந்த அதாவது மகப்-பேறு, சிசு மற்றும் குழந்தைகள் நல மருத்துவம், இருதய சிறப்பு மருத்துவம், நரம்பியல் சிறப்பு மருத்துவம், சிறுநீரக சிறப்பு மருத்-துவத்தை மருத்துவமனையில் மகப்பேறு செய்வது சால சிறந்தது. இவையாவும் உள்ளடக்கிய மருத்துவமனையாக கே.எம்.சி.ஹெச்., ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திகழ்வதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.