/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மகா தரிசன நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் விடியவிடிய தரிசனம்
/
மகா தரிசன நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் விடியவிடிய தரிசனம்
மகா தரிசன நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் விடியவிடிய தரிசனம்
மகா தரிசன நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் விடியவிடிய தரிசனம்
ADDED : பிப் 16, 2025 03:34 AM
சென்னிமலை: சென்னிமலையில் தைப்பூச விழா மகா தரிசன நிகழ்வு, கோலாக-லமாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள், விடியவிடிய தரி-சனம் செய்தனர்.
சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு தைப்பூச விழா கடந்த, 3ம் தேதி கொடியேற்றத்-துடன் தொடங்கியது. பின்னர் பல்லக்கு சேவை, மயில் வாகன காட்சி, யானை வாகனகாட்சி, பஞ்சமூர்த்தி புறப்பாடு, தேரோட்டம், குதிரை வாகன காட்சி, தெப்போற்சவம் என விழா வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. தைப்பூச விழாவின் மிக முக்கிய நிகழ்வான மகாதரிசனம் நிகழ்ச்சி நேற்றிரவு கோலாகல-மாக நடந்தது.விழாவையொட்டி காலை, 10:00 மணிக்கு சென்னிமலை கைலா-சநாதர் கோவிலில், வள்ளி-தெய்வானை சமேத முத்துகுமாரசுவா-மிக்கு மகா சிறப்பு அபிஷேகம், அதை தொடர்ந்து மலர் அபி-ஷேகம் நடந்தது. அப்போது, ௬,௦௦௦ கிலோ மலர்களால் புஷ்பாஞ்-சலி நடந்தது. இரவு, 8:30 மணிக்கு நடராஜ பெருமானும், சுப்பிர-மணிய சுவாமியும் சமேதராக வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்தனர். இதில் லட்சக்கணக்கான பக்-தர்கள் கலந்து கொண்டு விடியவிடிய தரிசனம் செய்தனர். இரவு, 9:00 மணிக்கு நாதஸ்வர தவிலிசை கச்சேரியுடன் நான்கு ராஜவீதி-களிலும் உலா வந்த சுவாமிகள், அதிகாலையில் கைலாசநாதர் கோவிலை சென்றடைந்தன. இன்று மஞ்சள் நீர் அபிஷேகத்-துடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

