/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்க வீடு வீடாக ஓட்டு சேகரித்த அமைச்சர்
/
தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்க வீடு வீடாக ஓட்டு சேகரித்த அமைச்சர்
தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்க வீடு வீடாக ஓட்டு சேகரித்த அமைச்சர்
தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்க வீடு வீடாக ஓட்டு சேகரித்த அமைச்சர்
ADDED : ஜன 30, 2025 05:03 AM
ஈரோடு: 'இண்டி' கூட்டணி சார்பில் இதுவரை தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை, ம.தி.மு.க., முதன்மை செயலாளர்
எம்.பி., துரை வைகோ, இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்த-ரசன் ஆகியோர் தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஓட்டு சேக-ரித்துள்ளனர். இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் முன்-னிலையில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்து பேசியதாவது: தி.மு.க., அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதம், 1,000 ரூபாய் மகளிர் உரிமை தொகையாக வழங்கி வருகிறது. விடுபட்ட மகளிருக்கும் கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி, அரசு பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம், உயர் கல்வி படிக்கும் மாணவ, மாணவியருக்கு புது-மைப்பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதம், 1,000 ரூபாய் என நேரடியாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.ஈரோடு சி.என்.கல்லுாரியில் உள் விளையாட்டு அரங்கம், ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம், நவீன நுாலகம் அமைக்கப்பட உள்-ளது. ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, சோலாரில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்-கப்படுகிறது. இன்னும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்ற தி.மு.க., அரசை ஆதரித்து, உதய சூரியன் சின்னத்தில் ஓட்டுப்ப-திவு செய்து சந்திரகுமாரை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்-வாறு பேசினார். எம்.பி., பிரகாஷ், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், சச்சிதானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.

