/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முருங்கத்தொழுவில் சிறு ஜவுளி பூங்கா பணியை தொடங்கி வைத்த அமைச்சர்
/
முருங்கத்தொழுவில் சிறு ஜவுளி பூங்கா பணியை தொடங்கி வைத்த அமைச்சர்
முருங்கத்தொழுவில் சிறு ஜவுளி பூங்கா பணியை தொடங்கி வைத்த அமைச்சர்
முருங்கத்தொழுவில் சிறு ஜவுளி பூங்கா பணியை தொடங்கி வைத்த அமைச்சர்
ADDED : செப் 19, 2025 01:12 AM
சென்னிமலை, சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவில், 2 கோடி ரூபாய் மதிப்பிலான சிறிய ஜவுளி பூங்கா கட்ட நேற்று பூஜை நடந்தது. இதில் பங்கேற்ற கைத்தறி துறை அமைச்சர் காந்தி பேசியதாவது: கைத்தறி நெசவாளர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக
வருடந்தோறும் கூலி உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மற்ற தொழிலாளர்களை விட, கைத்தறி தொழிலாளர் தினமும், 300 முதல் 400 ரூபாய் வரை மட்டுமே கூலி பெறுகின்றனர். இதனால் இளைஞர்கள் தொழிலுக்கு வருவதில்லை. இதை கருத்தில் கொண்டே சிறிய ஜவுளி பூங்கா திட்டம் அறிவிக்கப்பட்டு, நான்காவது பூங்காவாக இன்று பணியை தொடங்கி வைக்கிறோம். இங்கு முதலில், 50 தறிகளும், அதன் பின், 50 தறிகளும் போடப்படும்.
இங்கு புதுப்புது ரகங்கள், குறிப்பாக ஏற்றுமதி ரகம் சுப்பையா, மதிப்பு கூட்டப்பட்ட மெல்லிய மெத்தை, மெத்தை உரை, லினன் சர்ட்டிங் ரகங்கள் உற்பத்தி செய்யப்படும். அப்போது இங்கு நெசவு செய்யும் நெசவாளர்களுக்கு நாளொன்றுக்கு, 700 ரூபாய் முதல் 1,000 வரை கூலி
கிடைக்கும்.
கடந்த ஆட்சியில் ஒன்பது கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிய கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் புனரமைக்கப்பட்டு தற்போது, 10 கோடி ரூபாய் லாபத்தில் இயங்குகிறது. அதேபோல் அரசு நுால் மில்களும், லாபத்தில் இயங்கி
வருகிறது.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.